இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். வெற்றிக்கு முக்கிய காரணமான விராட் கோலி 52 பந்துகளில் 72* ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர் ) அடித்து விளாசினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதன் மூலம் இந்தாண்டுக்கான ஒருநாள், டி 20, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார். டெஸ்ட் போட்டி 53.14, ஒருநாள் போட்டி 60.31, டி 20 போட்டி 50.85 என்ற சராசரியை வைத்துள்ளார்.
Tests: 53.14
ODIs: 60.31
T20Is: 50.85Virat Kohli once again averages over 50 in all three international formats 🤯 pic.twitter.com/3R8GnYwtvE
— ICC (@ICC) September 18, 2019