கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றன. வேலைவாய்ப்பு இழந்த பலரும், ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் ரம்மி உள்ளிட்ட பல விளையாட்டை விளையாடுகின்றனர். இது பல நேரங்களில் விபரீதமாக மாறி தற்கொலை வரை சென்று விடுகிறது. அண்மையில் கூட ரம்மி விளையாட ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்பி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று என்றும், ஆன்லைன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
அத்துடன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்த விராத் கோலி, தமன்னா உள்ளிட்ட அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நடிகர் பிரசன்னா ,சுதீப், ராணாவுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.