விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதையடுத்து பிரசவ கால விடுப்பு எடுத்து விராட் கோலி அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவை நன்றாக கவனித்து வந்தார். இதனால் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் கூட கலந்து கொள்ளவில்லை .
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
இந்நிலையில் இவர்களுக்கு தேவதை போன்ற ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் , தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .மேலும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். தற்போது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .