இந்திய விளையாட்டு வீரர்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை விராட்கோலிக்கு கிடைத்ததை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கிரிக்கெட்டை பொறுத்த வரையில், சச்சின், தோனி, சேவாக் கங்குலி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் தோனி சச்சின் ஆகியோருக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு கிடையாது. விராட் கோலியை பொருத்தவரையில், அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதைத்தாண்டி அவருடைய ரசிகர்கள் அல்லாதவர்களும் அவரை விரும்புவார்கள்.
அதனுடைய பிரதிபலிப்பே தற்போது கோலியின் புதிய சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளது. அதாவது விராட் கோலி அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் அவரை இன்ஸ்டாவில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 70 மில்லியனை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் வேறு எந்த ஒரு வீரருக்கும் கிடைக்காத பெருமை இது. விராட் கோலியின் இந்த சாதனையை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.