தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தற்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையின் மூலமாக அவர் வலியுறுத்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் சென்னையில் தொடங்கி சேலம், திருப்பூர், திண்டுக்கல் என பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது வழக்கமாகி கொண்டிருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் மூலம் உயிரிழப்புகள் ஏதும் பெரிய அளவில் இல்லை என்றாலும், இந்த குண்டு வீச்சை சம்பவங்கள் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் தமிழ்நாட்டில் வளர்ச்சி, வணிகம் சார்ந்த அனைத்தீற்கும் இது தடையாக அமையக்கூடும் என்றும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டினால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி ஏற்படும் என்றும் அறிக்கை மூலமாக ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.