Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் வெடிக்கும் கலவரம்.. மருத்துவமனைக்கு தீ.. 72 பேர் பலி..!!

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து நடந்த  ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கிற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்தனர். தற்போது அவருக்கு 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் கைதானதிலிருந்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நேற்று இரவில், டர்பன் நகரத்தில் உள்ள Lenmed என்ற மருத்துவனையில் தீ வைத்தனர். மேலும் சொவேட்டோ என்ற நகரத்தில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 நபர்கள் பலியாகினர்.

இது மட்டுமல்லாமல், டர்பன் நகரத்தில் ஒரு கட்டிட மாடியிலிருந்து குழந்தையை தரையில் தூக்கி எறிந்த காட்சி வெளியாகி பதற வைத்துள்ளது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் கலவரத்தை ஏற்படுத்தியதாக 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 1,234 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் . 1990-வருடங்களுக்கு பின் நாட்டில் நடக்கும் மிக கொடூரமான கலவரமாக இது உள்ளது என்று அதிபர் சிரில் ராமஃபோஸா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |