Categories
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் கடும் நிதி நெருக்கடி…. 10 நாட்களாக தொடரும் போராட்டத்தில் கலவரம்…!!!

ஈகுவடார் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் ஆர்ப்பாட்ட குழுக்கள் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகுவேடார் என்ற தென்னாப்பிரிக்க நாடு சமீப நாட்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அந்நாட்டில் மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுபொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிபரின் தவறான கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 10 தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும் தலைநகர் குவிட்டோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஏற்பட்டு காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது. இதில் 2 பேர் பலியானதாகவும்  காவல்துறையினர் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |