Categories
உலக செய்திகள்

விண்வெளியில் ஒலிம்பிக் போட்டிகள்…. அசத்திய நாசா வீரர்கள்…. மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள்….!!

விண்வெளியில் நாசா வீரர்கள் நடத்திய ஒலிம்பிக் போட்டியானது ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தன. இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விண்வெளியில் நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்பதனை குதூகலமாக நாசா விண்வெளி வீரர்கள் விளையாடி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து விண்வெளியில் நாசா வீரர்கள் டீம் சோயாஸ் மற்றும் டீம் டிராகன் என இரண்டு குழுக்களாக முதலில் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து முதலாவதாக No Hand Ball எனப்படும் பிங் பாங் விளையாட்டில் தங்களது மூச்சுக்காற்றால் பாலை ஊதியும் தள்ளியும் மிதந்தபடியே விளையாடுகின்றனர்.

இதற்கு பிறகு sychronised floating என்ற விளையாட்டை நாசா வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுகின்றனர். மேலும் இறுதியில் மிதந்த படி ஜிம்னாஸ்டிக் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகளையும் விளையாடியுள்ளனர். இந்த காட்சியை நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. குறிப்பாக தங்கள் வீடு மற்றும் நாடுகளைப் பிரிந்து ஏதோ ஒரு அண்டத்தில் வாழும் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் இப்படி மகிழ்ச்சியாக விளையாடுவது போன்ற காட்சியானது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

Categories

Tech |