Categories
உலக செய்திகள்

எனக்கு பொறாமையா இருக்கு…. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் அமேசான் நிறுவனர்…. பேட்டி அளித்த கூகுளின் CEO…!!

அமேசான் நிறுவனரின் விண்வெளி பயணம் குறித்து பொறாமைப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் CEO பேட்டி அளித்துள்ளார்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனியார் விண்வெளி விண்கல நிறுவனத்தை 2000ல்  தொடங்கினார். இந்த நிலையில் மனிதர்கள் செல்லக்கூடிய  முதல் விண்கலத்தில் வருகிற ஜூலை 20ஆம் தேதி  ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பெஸோஸும்  விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர்.  இந்த விண்கலமானது ப்ளூ ஆரிஜின்  நிறுவனத்திற்கு சொந்தமான மேற்கு டெக்சாஸில்  உள்ள ஏவுதளத்தில் இருந்து புறப்பட உள்ளது. மேலும் இந்த விண்கலமானது  கார்மன் கோடு என்று அழைக்கப்படும் விண்வெளியின் எல்லைக்கோடு வரை சுமார் 3,28,000 அடி பயணிக்க உள்ளது.

இதனை தொடர்ந்து  நாசாவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய தினம்  ஜூலை 20  என்பதால் விண்ணிற்கு செல்ல அந்த தேதியினை  தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இந்த விண்கலத்தில் 6 பேர் பயணிக்கலாம் எனவும் இதில் உள்ள ஒரு இருக்கைக்கான ஏலம் சுமார் 30 மில்லியன் டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் CEO  சுந்தர் பிச்சை அவர்களிடம் ஜெஃப் பெஸோஸின் விண்வெளி பயணம் குறித்து கேட்கப்பட்டது. அதில் அவர் கூறியதாவது  ” பூமி  எவ்வாறு சுற்றுகிறது என்பதை  விண்வெளியிலிருந்து பார்க்க எனக்கும் ஆவல் இருப்பதால் நான் கொஞ்சம் பொறாமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |