அடுத்த வார இறுதியில் விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள தனியார் விண்வெளி நிறுவன குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரும் பங்கேற்கவுள்ளார்.
அமெரிக்காவில் விர்ஜின் கேலடிக் என்னும் தனியார் விண்வெளி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினுடைய தலைவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட குழுக்கள் அடுத்த வார இறுதியில் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள “யூனிட்டி 22” ல் விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள்.
இதற்கிடையே இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவர் துணை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும் அடுத்த வார இறுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து சிரிஷா இந்தியாவிலிருந்து 2 ஆவது நபராக விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதால் அனைத்து தரப்பு கட்சியினரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.