Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி.. சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அரசு தடை ….!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும். பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமுலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கவும் மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

Categories

Tech |