Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ – வில்லனாகிறாரா வினய்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர்கள் வினய், யோகிபாபு நடிகை பிரியங்கா மோகன், ஆகியோர் இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது ஹீரோ திரைப்படம். இந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Doctor movie

இதனிடையே இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு மற்றும் தயாரிப்பு பணிகளை படக்குழு தொடங்கியுள்ள நிலையில், நடிகர் வினய், நடிகை பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வினய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வினய், துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த நிலையில், டாக்டர் வில்லன் என்ற அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |