Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

4 இல்ல 14 கூட கேட்போம்…. எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு…. பொங்கி எழுந்த சு.வெங்கடேசன்….!!!

தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 4-வது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மறுத்துவிட்டதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு டிவீட்டில், பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் உள்ளது.

தமிழகத்துக்கு 4-வதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம் ஆகும். ஆகவே  தர முடியாது என்று விமானத்துறை அமைச்சர் கூறுகிறார். கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம் ஆகும். நாங்கள் 4 மட்டும் அல்ல 14 கூட கேட்பதற்கு உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்று சு. வெங்கடேசன் ஆவேசமாக கூறியுள்ளார். அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கூறுவது போல பல வட மாநிலங்களில் அதிகளவில் சர்வதேச விமான நிலையங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் பல வட மாநிலங்களைப் போன்று இல்லாமல், அதிக அளவில் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்த வருமானத்திற்கு ஏற்ற வகையில் சலுகைகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கும் இதர தென் மாநிலங்களுக்கும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை விட அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதில் உத்தரப்பிரதேசத்தில் இதுவரையிலும் 3 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. இதை தவிர்த்து நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் உருவாகப்போகிறது. இதற்கு பிரதமர் மோடி நேரில் சென்று அடிக்கல் நாட்டினார். இதனைதொடர்ந்து அயோத்தியிலும் ஒரு சர்வதேச விமான நிலையமானது வர இருக்கிறது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் கேரளாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. அதைவிட பெரிய மாநிலம் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் தமிழ்நாட்டில் 4-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க ஏன் மத்திய அரசு இத்தனை தயக்கம், பாரபட்சம் காட்டுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |