Categories
உலக செய்திகள்

வித்தியாசமான முறையில்…. காதலை வெளிப்படுத்த ஏற்பாடு …. விமான விபத்தில் பலியான சோகம்….!!

காதலியிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த சென்ற இளைஞர் விமான விபத்த்தில் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலை பலவிதமான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கனேடியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று இரவு சிறிய ரக விமானம் மூலம், ‘will you marry me’ என்று எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டபடி  புறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து  பழைய மொன்றியலுக்கு அருகில் உள்ள மவுண்ட் செயின்ட் ஹெலன்ஸ் தீவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் விமானியும் படுகாயம் அடைந்துள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபர்தான் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டவரா என்றும் அவர் பெயர் விபரங்கள் குறித்தும் போலீசார் இன்னும் தகவல்களை வெளியிடவில்லை. இந்த விபத்துக்கான காரணம் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |