விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. மேலும் அவர்கள் புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் நேற்று விமான நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் அமெரிக்கா படை வீரர்கள், ஆப்கான் மக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவத்திற்கு ஐ.நா சபை மற்றும் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “காபூலில் நடந்த குண்டு வெடிப்பு மனித தன்மையற்ற செயலாகும். இது அங்கு மீட்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக தங்களால் முடிந்தவரை மக்களை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.