அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளருடன் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியாக மொபட்டில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(40), சிவா(20) மற்றும் கொளஞ்சி(30) ஆகிய 3 பேரிடம் சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மொபட்டில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்த கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மணல் அள்ளிய அந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.