Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

வீடுகளில் மகிழ்ச்சி, செல்வம் உண்டாக எவ்வாறு தீபம் ஏற்றலாம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!!

வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு  எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்..
நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது,  அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது.  ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின்  தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது.
பலரும் ஒவ்வொரு எண்ணெய்யும் விளக்கில் ஊற்றி ஏற்றுவார்கள்.  ஆன்மீகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன்  உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி, ஏற்றி அவர்களின் துயரங்களை போக்கி வீடுகளில் நன்கு சந்தோசத்தையும், அமைதியும் கொண்டு வரலாம் விளக்கு ஏற்றுவது முலமாக.
நல்லெண்ணெய்:
இறைவனுக்கு உகந்த தீபம் தூய்மையான நல்லெண்ணெய் தீபம், நல்லஎண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்  வீடுகளில் இருக்கும் பீடைகள் அனைத்தும் ஒழிந்து விடும். அது மட்டுமில்லாமல் நவகிரகங்களையும் இதன் மூலம் திருப்திபடுத்தலாம்.
நெய்:
நெய் தீபம் ஏற்றுவதால்  நம் வீடுகளில் எபோதும் சந்தோசம் நிறைந்து இருக்கும், அதோடு நவக்கிரகத்தின் மூலம் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும்.
தேங்காய் எண்ணெய்:
விநாயகரின் அருளை நீங்கள் பெற வேண்டுமென்றால் தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுங்கள் வீட்டில், குலதெய்வத்தின் அருளும் பெற்று மகிழ்ச்சியாக  இருக்கலாம்.
விளக்கெண்ணெய்:
புகழ் கிடைக்க வேண்டும் என்றால் விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி வீட்டில் வழிபடுங்கள்.
வேப்ப எண்ணெய்:
 வேப்ப எண்ணெயில்  தீபம் ஏற்றினால், கணவம், மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள்,  ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகி உறவு  மேம்படும்.
பஞ்ச தீப எண்ணெய்:
 நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் , இலுப்பைஎண்ணெய் ,மற்றும் பசுநெய் ஆகியவற்றை கலந்து செய்த எண்ணெய் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய் கொண்டு தீபம் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் துன்பங்கள், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வா வளம், மகிழ்ச்சி வளம் எல்லாம் அழிக்கும்.

Categories

Tech |