Categories
ஆன்மிகம் இந்து

விளக்கு ஏற்றும்பொழுது செய்யக்கூடாத சில தவறுகள்..!!

உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்.

விளக்கு ஏற்றும் பொழுது நம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவோம். விளக்கு ஏற்றும் போது நாம் செய்யக்கூடாத ஒரு சில முக்கிய செயல்கள் என்னென்ன அதைப் பற்றி நாம் பார்ப்போம்.

செய்யக்கூடாதவை :

விளக்கேற்றுதல் என்பதை இறை வழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகிறது இது இந்துக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உண்டு. அந்த வகையில் விளக்கு ஏற்றும் பொழுது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் உள்ளன.

*காலையில் 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும்.

*மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட்டால் நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிடைக்கும் .

*காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

*மாலையில் விளக்கேற்றும்போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

*பின்பக்கம் கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கம் உள்ள ஜன்னல்  கதவை சாத்திவிட்டு தான் விளக்கை ஏற்ற வேண்டும்.

*விளக்கேற்றிய பிறகு தலை சீவ கூடாது.

*விளக்கேற்றிய பிறகு வீட்டை பெருக்க கூடாது.

*விளக்கேற்றிய பிறகு சுமங்கலிப் பெண்கள் வெளியே செல்லக் கூடாது.

*விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

*விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

*விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.

*விளக்கேற்றும்பொழுது சாப்பிடக்கூடாது.

*விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு ,அரிசி இந்த விஷயங்களை எல்லாம் மற்றவர்களுக்கு தானமாகவும், கடனாகவும் கொடுக்கவே கூடாது.

இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் கடைபிடித்து வந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு போகலாம். ஒரு சில தடங்கல்கள் இல்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இது ஒரு பயனுள்ள விஷயம் இதை பின்பற்றுங்கள்.

Categories

Tech |