விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷன் விலகினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இத்திரைப்படத்தில் மாதவனாக சைப் அலி கானும், விஜய் சேதுபதியாக அமீர்கான் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
அதன் பிறகு அமீர்கான் இப்படத்தில் இருந்து விலகியதால் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தமானார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் கொரோனாவின் தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்த உடன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கொரோனா பரவல் குறைந்ததும் பைட்டர், க்ரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஆகையால் விக்ரம் வேதா திரைபடத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் இப்படத்திலிருந்து விலகியதாக தெரியவந்துள்ளது.