பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இத்திரைப்படத்திற்கு மைதானம் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.