Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”மகான்”……. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்……!!!!

”மகான்” படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த படத்தில் இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முடித்துள்ளனர் என படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |