Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் ‘தெறி’ திரைப்படம் செய்த புதிய சாதனை…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

தளபதி விஜயின் தெறி திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.

இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து தளபதி65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி திரை படத்தை ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் தற்போது 350 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இச்செய்தி விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |