ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் 63-வது என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும், நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் இரண்டாவது லுக் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be …………………. This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations 😊😊 pic.twitter.com/ZzLwIychvK
— Archana Kalpathi (@archanakalpathi) June 19, 2019
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த நேரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் “பிகில்” என்று வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.