தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜயின் “தளபதி65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.
ஆனால் தனது தாய் மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? மாஸ்டர், பிகில் படங்களைத் தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய் மொழியைப் புறக்கணித்து அவமானப் படுத்துவது சரியா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?Master, Bigil,படங்களை தொடர்ந்து
#Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?@actorvijay pic.twitter.com/VoqtagIqDY— வன்னி அரசு (@VanniArasu_VCK) June 22, 2021