Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி ஈரோடு மகேஷின் அழகிய குடும்பம்… வெளியான புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான ஈரோடு மகேஷ் தனது நகைச்சுவைத் திறன் மூலம் பிரபலமடைந்தவர். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகிய  ஈரோடு மகேஷ் இதன்பின் தான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் . இவர் மிகச் சிறந்த தமிழாசிரியர் மற்றும் மேடைப் பேச்சாளர் என்பதால் தூய தமிழில் இவர் செய்யும் காமெடிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் .

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்நிலையில் ஈரோடு மகேஷ் அவரது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |