Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் சேதுபதியை பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் ‌. இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் .

சிரஞ்சீவி - விஜய் சேதுபதி

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிப் பேசியுள்ளார் . அதில் அவர் ‘விஜய் சேதுபதி சிறந்த மனிதர். கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையையும் உணர்ந்து நடிப்பவர்’ என்று கூறியுள்ளார் . நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சிரஞ்சீவி இருவரும் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |