Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘லாபம்’…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…. ரசிகர்கள் ஆவல்…!!!

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இத்திரைப்படத்தினை மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |