Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் குழந்தைக்கு முத்தமிட்டு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்…!!!

ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்ட விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி  படங்களில் எவ்வளவு ஆர்வம் காட்டி நடித்து வருகிறாரோ, அதேபோல் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக திகழ்கிறார்.

குறிப்பாக கஷ்டம் என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அவரிடம் வந்து கேட்டுள்ளார். ரசிகரின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி அந்த குழந்தைக்கு துருவன் எனப் பெயர் சூட்டியுள்ளார். மேலும் அந்த குழந்தையை கொஞ்சி, தலையில் முத்தமிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

Categories

Tech |