Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி, டாப்ஸின் திகில் திரைப்படம்…. ஓடிடியில் ரிலீஸ்….!!!

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைபடம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்கள் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்னும் திரைப்படம் விரைவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு பெயரிடாத திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Categories

Tech |