Categories
இந்திய சினிமா சினிமா

மலையாளத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி…. ஓடிடியில் ரிலீசாகும் புதிய படம்…!!!

மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

விஜய் சேதுபதி, நித்யா மேனன், இந்து

அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு எழுத்தாளராக நடித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |