பிரபல இயக்குனர் ராம் சரண் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
மலையாளத் திரையுலகில் வெளியான “டிரைவிங் லைசன்ஸ்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் ராம்சரண் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். அதன்படி ராம்சரண் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தின் வந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி தெலுங்கிலும் பிரபலமடைந்துள்ளதால் அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.