தனுஷின் 44 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிக படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவரின் 44வது திரைப்படத்தை யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைகிறார். இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பு குறித்து மட்டும் வெளியாகியது. இந்த நிலையில் தற்பொழுது படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் பெயர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர் நித்யா மேனன் பெயர் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் உருவாக்கியுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். இதனை அடுத்து மேலும் விஜய் பட நடிகையான நித்யா மேனன் தனுஷின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.