Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் குறித்து ஒரே வார்த்தை… நடிகை ராஷ்மிகா மந்தனா என்ன சொன்னார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . நடிகர் விஜய் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வேகமாக பரவும் . நடிகர் விஜய் பற்றிய செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகிலும் பலர் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளதை அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் தெரிவித்து விடுவார்கள்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் . ‘தளபதி விஜய் குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள்’ என்ற ரசிகரின் கேள்விக்கு ‘தளபதி’ என கெத்தாக பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |