விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய உத்தரப்பிரதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 76 ரன்னும் , புவனேஷ்வர் குமார் 46 ரன்னும் குவித்தனர் .இமாச்சல அணி சார்பில் வினய் கலேட்டியா 3 விக்கெட்டும், சித்தார்த் சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்பிறகு இமாசலபிரதேச அணி களமிறங்கியது . இறுதியில் 27 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது .இதில் அதிகபட்சமாக பிரஷாந்த் சோப்ரா 99 ரன்னும், நிகில் கங்க்டா 58 ரன்னும் குவித்தனர் . உத்திரப்பிரதேச அணி தரப்பில் ஷிவம் மாவி 3 விக்கெட் கைப்பற்றினார் .இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.