விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்று லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன .இதில் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ,கர்நாடகா , இமாச்சலப் பிரதேசம், சவுராஷ்டிரா,கேரளா , சர்வீசஸ் மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நாளை முதல் காலிறுதி ஆட்டம் நாளை முதல் நடைபெறுகிறது .இதில் தமிழ்நாடு அணி காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியுடன் மோதுகிறது .இப்போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்த லீக் ஆட்டங்களில் தமிழக அணி 3 வெற்றி ,2 தோல்வியை சந்தித்துள்ளது . அதேசமயம் லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது .இதனால் அதே நம்பிக்கையுடன் காலிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் தமிழக அணி உள்ளது. இதனிடையே நாளை நடைபெறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து 22-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிரா- விதர்பா அணியும் , கேரளா- சர்வீசஸ் அணியும் மோதுகின்றன.இதன்பிறகு 24-ம் தேதி அரையிறுதி போட்டியும் , இறுதிப் போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.