நடிகர் விஜய் இரவு பார்ட்டியில் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் மோகன்லால் மற்றும் மகத்துடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ‘ஜில்லா’ திரைப்படத்தின் போது ஒரு இரவு பார்ட்டியில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.