அரசியல் பேசுவது சரியான வழிமுறையல்ல என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்>
தமிழ் சினிமாவில் அதிகம் மார்க்கெட் கொண்ட நடிகராக தற்போது தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என சில வட்டாரங்கள் தெரிவித்து வந்த போதிலும், அதனை விஜய் நேரடியாக இதுவரை கூறியதில்லை. அவர் சமீபகாலமாக ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் சூழ்நிலையில்,
தயாரிப்பாளரான டி. சிவா என்பவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நடிகர்கள் சிலர் அரசியல் பேசுவதால் தயாரிப்பாளர்களுக்கு தான் சிரமம் ஏற்படும் ஏற்படும் என்று தெரிவித்த அவர், சினிமா என்பது முழுக்க முழுக்க அரசை சார்ந்துள்ளது. அரசை ஆளும் இடத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எனவே நமக்கு உதவுபவர்களை எதிர்ப்பது அவர்களுக்கு எதிராக அரசியல் பேசுவது இவையெல்லாம் சரியான வழிமுறையாக இருக்காது என்று தெரிவித்ததுடன்,
ஏதாவது பிரச்சனை என்றால் அவர்களிடம் போய் நிற்கிறோம் ஆக அவர்களைப்பற்றி குறை கூறுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவதை பேசுவது முற்றிலும் தேவையற்றது என்று தெரிவிக்க, பெயரை குறிப்பிடா விட்டாலும் அவர் யாரை கூறுகிறார் என்பது தமிழ் சினிமா வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றபடி கிசுகிசுக்கள் கசிந்த வண்ணம் உள்ளன.