Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன்-2…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார்.

இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2ஆம் பாகம் 2023ம் வருடம் கோடையில் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தன் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அத்துடன் பிச்சைக்காரன் -2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

Categories

Tech |