Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

விடிய.. விடிய…! கரையை கடக்கும் ”நிவர்”…. நாளை தான் நிம்மதி – புதிய அலர்ட்

நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிவர் புயல் நகர்வு  குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்.

நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி, வங்கக் கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடலூருக்கு 290 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு 300 கிலோ மீட்டர்,  சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் புயல் 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் புயல், கரையை கடக்கும்போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |