கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார்.
இவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாடல் அழகியுடன் நட்பு இருந்தது. இவர் 19 வயது மாடல் அழகியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தன்னுடைய 3 ஆண் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அங்கு 4 பேரும் சேர்ந்து மது அருந்தியதில் 19 வயது மாடல் அழகி மயக்கம் அடைந்து விட்டார். உடனே ஆண் நண்பர்கள் 3 பேரும் இளம்பெண்ணிடம் வீட்டில் அழைத்து சென்று விடுவதாக கூறி தங்களுடைய காரில் ஏற்றி சென்று உள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மட்டும் காரில் ஏறாமல் ஹோட்டலில் இருந்து விட்டார்.
இந்நிலையில் இளம்பெண்ணை விடிய விடிய ஓடும் காரில் வைத்து 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் பெண்ணை வீட்டில் கொண்டு விட்டு விட்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் 3 ஆண் நண்பர்களும் தப்பிவிட்டனர். இந்நிலையில் மாடல் அழகியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இளம்பெண் மயங்கி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி மற்றும் 3 ஆண் நண்பர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இளம்பெண் விடிய விடிய காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.