Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய நடந்த சோதனை…. மேலும் சிக்கிய 183 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 183 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யகோரி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் உத்தரவின்படி, அந்தந்த பகுதிகளில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் காவல்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு ரவுடி மற்றும் பழைய குற்றவாளிகளை கைது செய்தனர்.

அதன்படி மொத்தம் 147 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 2-வது நாளாக சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநகர் பகுதியில் 44 பேரும் , மாவட்டத்தில் 139 பேரும் என மொத்தம் 183 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு 2 நாட்கள் நடந்த சோதனையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மொத்தம் 330 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |