Categories
கிரிக்கெட் விளையாட்டு

கண்ணான கண்ணே….! தோனி_க்கு மசாஜ் செய்யும் ஸிவா” வைரலாகும் வீடியோ …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை ஓய்வு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அவர் இன்னும் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார்.

Image result for dhoni daughter photos

இதனாலேயே அவர் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வங்கதேச தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின் தோனியின் தேர்வு குறித்து பேசிய தேர்வு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தற்போது இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது குறித்து தோனியிடம் பேசுவோம் என்றார். இதனால் தோனி எப்படி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Image result for dhoni daughter photos

இதுபோன்ற செய்திகள் ஒருபுறம் வந்தாலும் தோனி குறித்த வித்தியாசமான செய்திகளும் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் அவர் வாங்கிய கார், இந்திய அணியை சந்தித்தது இப்படி எத்தனையோ செய்திகளைக் கூறலாம். தோனிக்கு இருப்பது போன்று அவரது குட்டி மகள் ஸிவாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தோனியும் அவ்வப்போது தனது மகள் செய்யும் குறும்புத்தனமான புகைப்படத்தையும் காணொலியையும் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.

dhoni

அந்த வகையில் தோனி, அவரது மனைவியால் உபயோகப்படுத்தப்படும் ஸிவா தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காணொலி ஒன்று பதிவிடப்பட்டது.

அந்தக் காணொலியில் தோனிக்கு அவரது மகள் ஸிவா மசாஜ் செய்கிறார். மற்றொரு காணொலியில் தோனியின் முதுகில் சாய்ந்து கொண்டிருக்கும் ஸிவா தனது தந்தையுடன் சேர்ந்து பாடல்களுக்கு தலையை ஆட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்களால் பரப்பப்பட்டுவருகிறது.

https://www.instagram.com/p/B4AC2SDnEAF/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |