ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பெண் காவலர் ஒருவர் தர்காவிற்கு வருகை தந்த ஒருவரை அரையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாநிலத்தில் அஜ்மீர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கே பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்த ஒருவரை அறைவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எதற்காக அந்த நபரை பெண் காவலர் அறைந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி பெண் காவலருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.