Categories
பல்சுவை

நாளைக்கு பாத்துக்குறேன் மா… நீ ரெஸ்ட் எடு… தாயிடம் கெஞ்சி கேட்கும் மகன்… வைரலாகும் வீடியோ..!!

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன் தனது தாயிடம் கெஞ்சும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது

கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் சமயத்தில் அதனை காணொளியாக பதிவு செய்து அனுப்பிட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையதளத்தில் பரவிவருகிறது.

அந்த காணொளியில் முதல்நாள் தனக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தை முடிக்காத சிறுவன் மறுநாளும் தனது வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கையெடுத்துக் கும்பிட்டு மீண்டும் அனுமதி கேட்கிறான். இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக வைரலானதுடன் சிறுவன் ஒருவன் தனது பாட்டியை ஆன்லைன் வகுப்பில் அமரவைத்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |