எலிகளின் விளையாட்டை பூனை மெய்மறந்து பார்க்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது
சிங்கப்பூரில் பூனை ஒன்று இரண்டு எலிகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தான் அதனை வேட்டையாட வந்ததை கூட மறந்து போய் நின்ற காட்சி காணொளியாக பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் இரண்டு எலிகள் ஒன்றுக்கொன்று மிகவும் உற்சாகமாக விளையாடுகின்றது.
அப்போது அவற்றை வேட்டையாடுவதற்காக அங்கு வந்த பூனை எலிகளின் விளையாட்டை மெய்மறந்து பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. பூனை அங்கு வந்ததையும் தங்களையே அது பார்த்துக் கொண்டிருந்ததையும் அறியாத எலிகள் இறுதியாக உயிர் தப்பி சென்றுவிட்டது.