சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது.
மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது.
இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய யானைகள் போதையில் எங்கு சொல்வதென்றே தெரியாமல் அங்கேயே தேயிலைத் தோட்டத்துக்குள் முடிமகன்களை போல படுத்து உறங்கின. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.