பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. மாணவன் எவ்வளவுதான் தடுத்தாலும் நாய் விடுவதாக இல்லை. மாணவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த தாயார் மற்றும் அவ்வழியாக சென்றோர் வந்து கம்பு, கற்கள் உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கியபோதும், தண்ணீரை மேலே ஊற்றியபோதும் அவனது காலைநாய் விடவில்லை.
என்ன செய்வது என்று திகைத்து போன அவர்கள் விடாமுயற்சியாக, சுமார் 15 நிமிடங்கள் கடித்தபடியே இருந்த நாயை ஒரு கட்டத்தில் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பயந்து அந்த நாய் ஓடிவிட்டது. இருப்பினும் நாய் கடித்ததில் 2 கால்களிலும் பலத்த காயமடைந்த அந்த மாணவன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/adityatiwaree/status/1222205463606857728