50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தூரில் சீனியர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது. இந்த தொடரில் நாகலாந்து மற்றும் மும்பை அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் மும்பை மகளிர் அணியின் கேப்டனான சாயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய நாகலாந்து அணியின் வீராங்கனைகள் கிக்கியாங்கலா, ஜோதி, கேப்டன் சென்டிலிம்லா, இலினா போன்றோர் எவ்வித ரன்களும் எடுக்கவில்லை.
இதனால் போட்டியில் நாகலாந்து அணி மொத்தம் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவிட்டது. இந்நிலையில் மும்பை மகளிர் அணியின் கேப்டனான சாயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து வீராங்கனைகள் இஷா ஒஷா, ருஷாளி பகத் போன்றோர் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து மும்பை அணி 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் வெற்றி இலக்கை அடைந்துவிட்டனர்.