Categories
கிரிக்கெட் விளையாட்டு

விக்கெட் கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது – ஷாஹின் அஃப்ரிடி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில்  ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  முதலில் களமிறங்கிய இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனிடையே  இன்னிங்ஸ் முடிவில் பேசிய ஷாஹின் அப்ரிடி, “அணியின் திட்டத்தை செயல்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதன்படி போட்டி தொடக்கத்திலும்,இன்னிங்ஸ் முடிவிலும் விக்கெட்டுகள் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு நேற்று பயிற்சியின்போது நான் பந்தை ஸ்விங் செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். ஏனெனில்  ஸ்விங் இல்லையெனில்  பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பது சுலபமாகிவிடும் . அதேசமயம் நான் விக்கெட்டுகள் கைப்பற்ற ரன்களைக் கொடுப்பதற்கு கவலைப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |