Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டாரஸ் லாரி மீது மோதிய வாகனம்…. இடுபாடுகளில் சிக்கி ஓட்டுனர் பலி…. கோர விபத்து…!!!

லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து டாரஸ் லாரி புறப்பட்டது. இந்த லாரி சேலம்-சென்னை புறவழி சாலையில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி லாரி பாரஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த மணிமாறன்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மணிமாறனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |